பிரதமர் மோடி சென்னை வருகை நலதிட்ட பணிகள் துவக்கம்

பிரதமர் மோடி சென்னை வருகை நலதிட்ட பணிகள் துவக்கம்

சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைத் தமிழக அரசு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக (8.4.2023) இன்று மாலை சென்னை வருகிறார் பிரதமர். சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு .க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி மற்றும் பாஜக தலைவரான அண்ணாமலை ஆகியோர் பிரதமரை வரவேற்கின்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் டி என் எஸ் அடையாறு செல்கிறார் பிரதமர். அங்கிருந்து கார் மூலம் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். மேலும் அவர் செல்லும் வழியிடங்கள் எல்லாம் கரகாட்டம், தப்பாட்டம் என வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர் வருகையை கண்டு மக்கள் கரகோஷத்துடன் கைகளைத்தூக்கியும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.

மேலும் இவர் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட உள்ள தெர்மல் கட்டிடத்தைத் திறந்து வைக்கிறார், அடுத்ததாக சென்னை கோவை இடையான வந்தே பாரத் விரைவு ரயில் துவக்கி வைக்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் பல்லாவரத்தில் இருக்கக்கூடிய மைதானத்தில் ரூபாய் 294 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்றும் தனது ட்விட்டரில் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…