பங்குனி உத்திர திருவிழா

பங்குனி உத்திர திருவிழா

தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதம் பங்குனி,
நட்சத்திரங்களில் 12-ஆவது நட்சத்திரம் உத்திரம்.
இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம்…

பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் சிறப்புக்குரியதாகப் போற்றப்படுகிறது. இந்த நாளில் தான் சிவன்- பார்வதி, முருகன்- தெய்வானை உள்பட பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை புதன்கிழமை நடக்கிறது. 5.4.2023 அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கவிருக்கிறது.பங்குனி உத்திர திருவிழா நாளை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது வரை உள்ளவர்கள் கடைபிடிக்கலாம். பங்குனி உத்திரத்தன்று விரதத்தைத் தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் கடைப்பிடித்து வந்தால், அடுத்த பிறவியில் தெய்வீகப் பிறவி கிடைக்கும் என்று புராணங்கள் சொல்கின்றன. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம் மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related post

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நடிகர் அருண் விஜய் ஆக்சன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். நடிகர் அருண் விஜயின் ஆக்சன் திரைப்படமான ரெட்ட தல திரைப்படத்தில் உருவாகி வருகிறது…இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்…
பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிஸில் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று கோலாகலம் !

பாரிசில் 33 ஆவது ஒலிம்பிக் திருவிழா இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த விளையாட்டுத் திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 42 வகையான விளையாட்டுகளில்,…
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக…