நீட் தேர்வு இரண்டாவது தற்கொலை பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் அறிக்கை

நீட் தேர்வு  இரண்டாவது தற்கொலை பாமக தலைவரான அன்புமணி  ராமதாஸ்  அறிக்கை

நீட் தேர்வால் கடந்த பத்து நாட்களில் இரண்டாவது தற்கொலை.பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் “தேர்வில் தோல்வியடைந்து விடுவோம்” என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரியத்தை சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளியான உத்திராபதியின் மகள் நிஷா, சென்ற ஆண்டில் நீட் தேர்வு எழுதிய மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. எனவே இந்த ஆண்டில் மீண்டும் நீட் தேர்வுக்காக நெய்வேலியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தின் மாதிரி தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தார். இதனால் மனம் வேதனை அடைந்த நிஷா நேற்று வடலூரில் தொடர்வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபோல் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற சந்துரு என்ற மாணவன் நீட் தேர்வின் அச்சத்தால் பயிற்சி மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்து கொண்ட இரு குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…