தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலி டாக்டர்கள் கைது!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலி டாக்டர்கள் கைது!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கிளினிக் அமைத்து போலி டாக்டர்கள் மருத்துவம் தொழிலைப் பார்ப்பதாக புகார் எழுந்த நிலையில் காவல்துறையானது 103 பேரை கைது செய்துள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் இல்லாத, மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ படிப்பு இல்லாதவர், மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத போலி மருத்துவர்கள் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் செ. சைலேந்திர பாபு தமிழக காவல்துறைக்கு சோதனை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டதன் படி தமிழக முழுவதும் 18 நாட்களில் தமிழகம் முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ,திருவாரூர் விழுப்புரம், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், வேலூர் ,தர்மபுரி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ,மதுரை, கரூர் திண்டுக்கல், பெரம்பலூர் தேனி மற்றும் அரியலூர் உள்பட பல மாவட்டங்களில் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்தொழில் செய்வதற்கு முறையான தகுதி வாய்ந்த மருத்துவ படிப்பு பெற்றவர்களே மருத்துவர்கள் ஆவர். தற்போது நடைமுறையில் போலி டாக்டர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெறாத ரத்தப் பரிசோதனை மையங்கள் இயக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தடுக்கும்பொருட்டு சைலேந்திரபாபு அவர்கள் அனுமதி பெறாத மருத்துவ தொழில் செய்வோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

Related post

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயன் SK 23 திரைப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் சஞ்சய் தத்!

சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்தத் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படம் படபூஜையுடன் தொடங்கப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட…
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் குரங்கு பெடல் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. குரங்கு பெடல் திரைப்படத்தைக் கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் காளி வெங்கட் ,சந்தோஷ் வேல்முருகன், வி…
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல்  ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் செப்டம்பரில் 27இல் ரிலீஸ்!

சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத் திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் பீலிங்ஸ்…