கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம்

திருநெல்வேலியில் விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆறு காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளது. அம்பா சமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வரும் பல்வீர் சிங் சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழும்பியுள்ளது. பத்துக்கு மேற்பட்டோர் இது போன்ற இதுபோன்ற தண்டனை அளித்துள்ளதாகவும் ,அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனைத் தொடர்ந்து, விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி தண்டனை அளித்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அமைப்புகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன் மகாதேவி சார் ஆட்சியருக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே ஏ எஸ் பி பல்விர் சிங் காத்திருப்போர் போர்பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…