கேரளாவில் செல்போன் வெடித்ததில் 8 வயது சிறுமி பலி.கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ 8 வயது சிறுமி நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நேரம் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் பேட்டரியின் வெப்பம் அதிகமாகும் எனவே குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களே உஷாராக இருங்கள்!