கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவாட்டில் பணம் வாங்கும் ஊழியர்களும் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து பிரசவம் மற்றும் குழந்தைகள் நலன் கருதி பழைய மருத்துவமனை கட்டிடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகள், பிரசவ அறைக்குள் சென்றவுடன் அவர்களின் உறவினர்களிடம் வேலை ஆட்கள் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் தரக்குறைவாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களின் தேவைகள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை, அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிவறைகளில் தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை எனவும் கூறினர். மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

Related post

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா!

கோவையில் முப்பெரும் விழா ஜூன் 15ஆம் இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தின் கொடிசியா மைதானத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பிரம்மாண்ட விழாவாக நடைபெற உள்ளது. மறைந்த…
பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக் கல்வித்துறை சார்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா!

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நேற்று தினம் ஐம்பெரும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு விருந்தினராக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுயிருந்தனர். இந்த…
குப்பைகளை நீர்நிலையில் கொட்ட வேண்டாம்! -சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை!

குப்பைகளை நீர்நிலையில் கொட்ட வேண்டாம்! -சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாடு, விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சி ஜூன் 14ஆம் தேதி முதல் 17ஆம்…