உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலாகும். மேலும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.பிறந்தால் முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூர் என்றாலே ஞாபகம் வருவது ஆழித்தேர்தான்.ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆழித்தேர்… அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி. அசைந்தாடி வீதிகளில் வலம் வரும் 300 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் திருவாரூர் தேர் ஆகும்.

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 01.04.2023 இன்று திருவாரூர் தேர்த் திருவிழா கோலகலமாக நடைபெற்றது.ஆழித்தேர், கடல் போன்ற பெரிய தேர்தான் ஆரூரின் தேர். உலகத்திலேயே பெரிய தேர் என்றால் அது இந்தத் திருவாரூர்த் தேர்தான். இந்தத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து இந்தத் தேர் இழுத்துக் கொண்டாடுவர். ‘தேர் முனை திரும்பும் அழகைக் காணக் கண் கோடி போதாது’ என்பது திருவாரூர் மக்கள் வாக்கு. அத்தனை பேரழகாய் இருக்கும் இந்தத் தேர் திரும்பும் அழகு. இந்த ஆழித்தேர் இழுக்க இழுக்க, ‘ஆரூரா ‘ என்ற கோஷமும் வானை எட்டும் அளவுக் கேட்கும். அந்த உற்சாகத்தில் திளைத்தே மக்கள் தேர் இழுத்து மகிழ்வர்.

Related post

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

காச நோய் இல்லாத இந்தியா பிரதமர் மோடி!

 இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆண்டு வரை காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது.இந்தியாவில் மக்களிடையே 17.7 சதவீதம் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா…
மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி திரைப்படம்!

மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி திரைப்படம்!

 மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இயக்குநரான மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தை மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிர்ஷ்டசாலி திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…
ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

நடிகர் ஜெயம் ரவியின் பிரதர்ஸ் திரைப்படம் தீபாவளி தினத்தன்று ரிலீஸ்! பிரதர்ஸ் திரைப்படத்தை எம். ராஜேஷ் இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி…