உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம்

பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலாகும். மேலும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.பிறந்தால் முக்தி தரும் தலம் திருவாரூர். திருவாரூர் என்றாலே ஞாபகம் வருவது ஆழித்தேர்தான்.ஆசியாவிலேயே மிகப்பெரியது ஆழித்தேர்… அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி. அசைந்தாடி வீதிகளில் வலம் வரும் 300 டன் எடை கொண்ட பிரம்மாண்ட தேர் திருவாரூர் தேர் ஆகும்.

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 01.04.2023 இன்று திருவாரூர் தேர்த் திருவிழா கோலகலமாக நடைபெற்றது.ஆழித்தேர், கடல் போன்ற பெரிய தேர்தான் ஆரூரின் தேர். உலகத்திலேயே பெரிய தேர் என்றால் அது இந்தத் திருவாரூர்த் தேர்தான். இந்தத் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அனைத்து ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து இந்தத் தேர் இழுத்துக் கொண்டாடுவர். ‘தேர் முனை திரும்பும் அழகைக் காணக் கண் கோடி போதாது’ என்பது திருவாரூர் மக்கள் வாக்கு. அத்தனை பேரழகாய் இருக்கும் இந்தத் தேர் திரும்பும் அழகு. இந்த ஆழித்தேர் இழுக்க இழுக்க, ‘ஆரூரா ‘ என்ற கோஷமும் வானை எட்டும் அளவுக் கேட்கும். அந்த உற்சாகத்தில் திளைத்தே மக்கள் தேர் இழுத்து மகிழ்வர்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…