ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படம் பிரதமர் மோடி சந்திப்பு

ஆஸ்கார் விருது வென்ற ஆவணப்படம்  பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் மோடி 9.04.2023 அன்று காலை பந்திப்பூரில் உள்ள புலிகள் சரணாலயத்தைப் பார்வையிட்டார் ,அங்கிருந்து பயணம் செய்த மோடி அவர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை புரிந்தார்.அங்குள்ள யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்குத் தலைவர் மோடி கரும்பை உணவாகக் கொடுத்தார். சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) ஆவணப்படத்திக் இடம் பெற்ற பொம்மன் பெள்ளி தம்பதியைச் சந்தித்து பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி அவர்கள் பொம்மன் பெள்ளி தம்பதியைச் சந்தித்து பேசினார் அவர்களின் செயலுக்கு பாராட்டு தெரிவித்த மோடி அவர்கள் அவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். யானை குட்டிகளை வளர்ப்பது பற்றி பற்றியும், டெல்லிக்கு தன்னை அழைத்ததாகவும் ,எந்த உதவியாக இருந்தாலும் தன்னைக் கேட்குமாரும் கூறியதாகவும் பென்னி பொம்மை தெரிவித்தனர். பொதுமக்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்கள் மக்களை பார்த்து கையசைத்தார். முதுமலை பயணத்தை நிறைவு செய்யும் விதமாக மோடி மைசூர் புறப்பட்டார்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…