சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள் எடுத்தால் 3000 ரன்களை ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கடப்பார் ‘தல’ தோனி.சி.எஸ்.கே கேப்டனாக 61 சதவீத போட்டிகளில் வென்றிருக்கிறார் தோனி.சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி 57 போட்டிகளில் விளையாடி 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி 72 சதவீதம் ஆகும்.

தோனி தலைமையில், இந்தியா 2007 ஐ.சி.சி, டி.20 உலகக்கோப்பை, 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 2011 இறுதிப் போட்டியில் தோனி மேட்ச் வின்னிங் சிக்ஸரை அடித்தார். 2010 மற்றும் 2016 ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தோனி தலைமையின் கீழ், இந்தியா 2010 மற்றும் 2011 மற்றும் 2013 ஐ.சி.சி ஒருநாள் சாம்பியன்ஷிப்பை வென்றது. தோனி விக்கெட் கீப்பிங்கிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். தோனியின் அமைதியான தலைமைப் பண்பு அவருடைய அணியை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

Related post

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…
மும்பை இந்தியன்ஸ்  த்ரில் வெற்றி !

மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி !

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 173 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…