விக்னேஷ் சிவன் பற்றிய சில விழிப்புணர்வு செய்திகள்

“என்னுடைய படங்களில் இது போன்ற காட்சிகளை நான் எடுத்ததில்லை ” – என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ” நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது ,புகைபிடிப்பது…

“என்னுடைய படங்களில் இது போன்ற காட்சிகளை நான் எடுத்ததில்லை ” – என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ” நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது ,புகைபிடிப்பது போல் படம் எடுத்ததில்லை “என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் “சினிமாவில் போதை பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான், குறித்து காவல்துறை கூட அறிவுறுத்து உள்ளது” என்றார் விக்னேஷ் சிவன் அவர்கள். மேலும் , சில இயக்குனர்கள் அதுபோன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் ; என்றார் விக்னேஷ் சிவன். மேலும் சென்னையை போல், கோவையிலும் லோகேஷ் கனகராஜ் முயற்சியில் இது போன்ற விழிப்புணர்வு குறும்படம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முயற்சியில் ஏற்படுத்த எடுக்கும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் போதை பழக்கம் உடையவர்கள் தாமாக முன்வந்து திருந்த வேண்டும் என்று நினைத்தால் மட்டும் தான் திருந்த முடியும் என்றார். நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, புகை பிடிப்பது போல படம் எடுப்பதில்லை. அதுபோன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு கார்டு போடப்படும்; ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு கார்டு போடப்பட்டது இல்லை, ‘நானும் ரவுடி’ தான் படம் புதுச்சேரியில் எடுத்தேன். குழந்தைகள் தான் குழந்தைகள்தான் அதிகமாக படங்கள் பார்க்கிறார்கள் அவர்களை பாதிக்காத வகையிலும், கொண்டு போகாத வகையிலும் ,படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்” விக்னேஷ் சிவன்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…