• April 10, 2023

ஆன்லைன் ரம்மி தடை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் !

ஆன்லைன் ரம்மி தடை ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல்.தமிழகச் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்…

ஆன்லைன் ரம்மி தடை ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல்.தமிழகச் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்..ஆன்லைன் ரம்மி ஆட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி,இதுவரை 45-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆளுநர்களுக்கு சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார்..மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மார்ச் மாதம் 23ஆம் தேதி மசோதாவை தாக்கல் செய்தார். மார்ச் 24ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார் இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…