ராக்ஸ்டார் ரமணியம்மாள் மரணம்!

வீட்டு வேலை பார்த்த பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மரணம்! ஜீ தமிழ் எனும் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில், போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ரமணியம்மாள். வீடுகளில் பாத்திரம்…

வீட்டு வேலை பார்த்த பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மரணம்! ஜீ தமிழ் எனும் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில், போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ரமணியம்மாள். வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் போது பாடுவதையே வழக்கமாகக் கொண்டவர். இவரின் பாடலைக் கேட்ட ஒரு வீட்டு உரிமையாளர் ச ரி க ம பல என்ற நிகழ்ச்சி குறித்து கூறவும், அதில் போட்டியளராக கலந்து கொண்டு இறுதி கட்ட தேர்வில் வெற்றி பெற்றார். 67 வயதான இவர் ரமணியம்மாள் நேற்று இறந்து போனார் . கடந்த மூன்று மாதம் காலமாக ரமணியம்மாள் உடல் நலக்குறைவாகத்தான் இருந்து வந்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்துப் பார்த்து உடலில் உள்ள பிரச்சனைகள் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் நன்றாக இருப்பதாக மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இன்று காலை உறக்கத்திலேயே ரமணியம்மாள் பிரிந்து போய்விட்டது.

சமீபத்தில் வெளியான யோகி பாபு நடித்த பொம்மை நாயகி எனும் திரைபடத்தில் ரமணியம்மாள் பாடியிருந்தார். அவருடைய காந்த குரல் எல்லா வயதினராலும் ஈர்க்கப்பட்டது. இவர் ‘ராக் ஸ்டார்’ எனப் பெயர் பெற்றார். திறமையை காட்டுவதற்கு வயது ஒரு வரம் இல்லை என மக்களுக்கு உணர்த்தியவர். இவருடைய மரணம் பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…