மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி !

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 173 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு…

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுவதற்கு 173 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர். பிரித்வி ஷா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே 26 ரன்கள் எடுத்தார்.யாஷ் துல் 2 ரன்னும், லலித் யாதவ் 2 ரன்னும் எடுத்து ஆட்டத்தினை இழந்தனர். இதை அடுத்து இணைந்த டேவிட் வார்னர்- அக்சர் படேல் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

வார்னர் 43 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதில் மொத்தம் 6 பவுண்டர்கள் அடங்கும். டேவிட் வார்னர் 51 ரன்னில் ஆட்டத்தினை இழந்தார். டெல்லி அணியில் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். 19.4 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் களை இழந்த டெல்லி அணி 172 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் தரப்பில் ஜேசன் பெஹரன்டோப் மற்றும் பியுஷ் சாவ்லா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். 173 ரன்களை அடைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் இலக்கை நோக்கிய மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…