தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு புயல், மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் இன்று சென்னைக்கு வந்தார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் உடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக நிவாரண நிதியாக ரூபாய் 5 ,060 கோடி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழக அரசின் கோரிக்கைகளை மனுவாக மத்திய அமைச்ச ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை குறித்து பிரதமர் மோடியும் கேட்டறிந்தார் , தொடர்ந்து தமிழ்நாட்டில் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றார். மேலும் தமிழகத்தின் வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு முதற்கட்டமாக ரூபாய் 450 கோடி விடுவித்துள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அறிவித்துள்ளார். மேலும் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வுளுக்கு மத்திய குழு விரைவில் தமிழகத்திற்கு வரும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ் 561.29 கோடி நிவாரணத்திற்காக இரண்டாவது தவணையாக மத்திய அரசு வழங்கியுள்ளது.