• April 10, 2023

மதுரை -நத்தம் சாலையில் நீண்ட மேம்பாலம்

மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோமீட்டர் நீளம் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை சென்னை வந்த பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாலை…

மதுரை நத்தம் சாலையில் 7.3 கிலோமீட்டர் நீளம் மேம்பாலம் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை சென்னை வந்த பிரதமர் மோடி நேற்று காணொளி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாலை 6.47 மணிக்கு வாகனங்கள் மேம்பால சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. பாலத்தின் வழியே மக்கள் உற்சாகமாக பயணித்தனர். மதுரை -நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகர் பகுதியில் சொக்கி குளத்தில் இருந்து ஊமச்சி குளத்தை அடுத்த மாரணி வரை 7.3கி.மீ தூரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் புதிய வடிவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு விட்டது.

இன்னும் சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. மதுரை -நத்தம் மேம்பாலம் ரூ 6,13 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறப்பின் போது மதுரையில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. பிரதமர் பாலத்தை திறந்ததும் பொதுமக்களின் அனுமதிக்கப்பட்டனர். சென்னை செல்லும் 90 சதவீத பயணிகள் இந்த மேம்பாலம் வழியாகவே பயணிகள் பயணித்தனர். நத்தம் மட்டுமின்றி திண்டுக்கல் ,அலங்காநல்லூர் ,அழகர் கோயில் என பல இடங்களுக்கும் செல்ல மேம்பாலம் முக்கிய இணைப்பாக உள்ளது. இந்த மேம்பாலம் பொதுமக்கள் அனைவருக்கும் பயன் தரும் வகையில் உள்ளது

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…