பொன்னியின் செல்வன் பாகம் 2 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும்

பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடயாகும் என்பதைப் பற்றி படக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமரர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன்…

பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் முதல் பாடல் எப்போது வெளியிடயாகும் என்பதைப் பற்றி படக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமரர் கல்வி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக எடுத்துள்ளார் இரண்டு பாகங்களாக உருவாகிய இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முப்பதாம் தேதி பெரும் வரவேற்புடன் மக்கள் மத்தியில் வெளியானது. சினிமா ரசிகர்களைக் கவர்ந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிகளை வசூலித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தது.

அமெரிக்காவில் ரஜினியின் படம் 2.0 படத்தைக் காட்டிலும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் அதிக வசூல் சாதனையை புரிந்தது லைக்கா மற்றும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம்,கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா லட்சுமி சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று படக் குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல் ஏ.ஆர் ரகுமான் உருவாகியுள்ளார். இந்தப் பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார் சக்தி கோபாலன்பாடியுள்ளார்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…