பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம்

உலகிலேயே மிகப் புகழ்பெற்ற டைமன் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலில் ஷாருக்கான் முதலிடம். டைமன் இதழானது வருடம் தோறும்…


உலகிலேயே மிகப் புகழ்பெற்ற டைமன் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி செல்வாக்கு மிக்க டாப் 100 நபர்களுக்கான பட்டியலில் ஷாருக்கான் முதலிடம். டைமன் இதழானது வருடம் தோறும் செல்வாக்கு மிகுந்த நபர்களைப் பட்டியலிட்டு தங்களது வாக்கெடுப்பினை நடத்திய பின்னரே முடிவுகளை வெளியிடும். எனவே 2023 ஆண்டிற்கான வாக்கெடுப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். உலகளவில் புகழ்பெற்ற கால் பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதல் இடத்தில் உள்ளார். டைமன் இதழின் கருத்துக்கணிப்பின்படி பட்டியலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வந்தர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் தடகள வீராங்கனை செரினா வில்லியம்ஸ், நடிகர் மைக்கேல் யோ, கால் பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி, மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர் பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ துலா டா சில்வா போன்ற நபர்களும் இடம்பெற்றுள்ளனர்.

டைமன் இதழின் அறிக்கையின் படி மொத்தம் பதிவான 12 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் நான்கு சதவீத வாக்குகளைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதான் படத்தின் மூலம் அபார வெற்றினை ஷாருக்கான் பெற்றிருக்கிறார். மேலும் புதுடெல்லி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் முன்னணி பத்திரிகையான டைமன் இதழில் வாசகர் வாக்கெடுப்பில் வெற்றியாளராக ஷாருக்கான் முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…