‘தசரா’ படம் எப்படி இருக்கிறது?

அதிகாரப் போட்டியினால் ஒரு கிராமத்திற்கு வரும் சிக்கலுக்கு, அதில் மாட்டிக்கொள்ளும் நபர்களையும் பற்றிய கதையே ‘தசரா’. வீரப்பள்ளி வீரலப்பள்ளி கிராம மக்கள் நிலக்கரி சுரங்க வேலையை வாழ்வாதாரமாக…

அதிகாரப் போட்டியினால் ஒரு கிராமத்திற்கு வரும் சிக்கலுக்கு, அதில் மாட்டிக்கொள்ளும் நபர்களையும் பற்றிய கதையே ‘தசரா’. வீரப்பள்ளி வீரலப்பள்ளி கிராம மக்கள் நிலக்கரி சுரங்க வேலையை வாழ்வாதாரமாக கொண்டவர்கள். இந்த ஊரில் நிலக்கரியை திருடி விற்று குடித்து கொண்டிருக்கும் நண்பர்கள் தரணி (நானி) மற்றும் சூரி (தீக்ஷத் ஷெட்டி). வீர எல்லாம் பள்ளி கிராமத்துக்கு இரண்டு சிக்கல்கள். ஒன்று அந்த ஊரில் இருக்கும் சில்க் பார், இன்னொன்று கிராம தலைவராக இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் போட்டி. ஊரில் கிராம தலைவர் தேர்தலில் ஜெயிப்பவருக்கே பார் நடத்தும் போட்டி. ஊரில் கிராம தலைவர் தேர்தலில் ஜெயிப்பவருக்கே பார் நடத்தும் உரிமை வழங்கப்படும். ஊரில் உள்ள ஆண்கள் மொத்தமும்,பாரிலேயே குடியிருக்கிறார்கள்.

எனவே அவர்களை கைக்குள் வைத்துக்கொள்ள அந்த வாரை கைப்பற்றுவது, கிராம தலைவர் ஆவதை விட முக்கியம். ராஜண்ணா (சாய் குமார்) ஒரு புறமும், ஷிண்ணா (சமுத்திரக்கனி), சின்னா (ஷைன்டாம் சாக்கோ) மறுபுறமும் போட்டிக்கு நிற்கிறார்கள் எதிர்பாராத விதமான இந்த அரசியல் அவ்விடத்திற்குள் தரணி மற்றும் சூரி சிக்கி கொள்கிறார்கள். அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் வாழ்வு என்ன ஆகிறது என்பதே மீதி கதை. ஒளிப்பதிவாளர் சத்ரயன் சூரியன் மற்றும் கலை இயக்குனர் அவினாஷ் கொல்லா, வீரல பள்ளி கிராமத்தை மிக அழகான திரையில் கொண்டு வந்திருந்தார்கள்.

காதல் காட்சிகள், சண்டை காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்தையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த கதை ஓரளவுக்கு அழுத்தமாகவும் இருக்க பெரிதும் உதவுவது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. மைனரு வேட்டி கட்டி பாடலும் மிகச் சிறப்பு. நடிகர்களின் பர்ஃபார்மஸ் பார்த்தால் நானி தசரா படத்தில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார் . என்பது உண்மை.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…