டேவிட் வார்னரை விமர்சித்த சேவாக் -ஐ.பி.எல்

ஐபிஎல் தொடரில் {8.4.2023} அன்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை விட ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் டெல்லி அணி மூன்றாவது…

ஐபிஎல் தொடரில் {8.4.2023} அன்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை விட ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் டெல்லி அணி மூன்றாவது தொடரிலும் தோல்வியை சந்தித்துள்ளது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய் ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பமே தோல்வியுற்றது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோரை ராஜஸ்தான் அணியின் வீரரான ட்ரெண்ட் போல்ட் வீழ்த்தினார்.

அதன் பிறகு டெல்லி அணியின் கேப்டன் வார்னர் மட்டும் பொறுமையாக விளையாடி 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டத்தினை இழந்தார். இதனைக் குறித்து டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய வீரருமான வீரேந்திர சேவாக் டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்தார். தயவு செய்து ஐபிஎல் போட்டிக்கு வரவே வேண்டாம் என்றார். “நீங்கள் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் என்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களிடமிருந்து எவ்வாறு அதிரடியாக விளையாடுவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார் ஷேவாக்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…