ஜொலிக்கும் உடையில் கலக்கல்! நீடா அம்பானி விழாவில் பிரபலங்கள்

ஜொலிக்கும் உடையில் கலக்கல்! நீடா அம்பானி விழாவில் பிரபலங்கள்; கண்ணை பறிக்கும் வண்ண விளக்குகள், ஜொலிக்கும் அரங்கங்கள் என இந்தியா இதுவரை பார்த்திடாத மிகப் புதிய பிரம்மாண்ட…

ஜொலிக்கும் உடையில் கலக்கல்! நீடா அம்பானி விழாவில் பிரபலங்கள்; கண்ணை பறிக்கும் வண்ண விளக்குகள், ஜொலிக்கும் அரங்கங்கள் என இந்தியா இதுவரை பார்த்திடாத மிகப் புதிய பிரம்மாண்ட கலாச்சார மையத்தை இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக முகேஷ் அம்பானியின் மனைவி தொடங்கி வைத்தார். இதன் திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி உள்பட பாலிவுட் திரை பிரபலங்கள் பெரும்பாலானோர் பங்கேற்று சிறப்பித்து இருந்தனர். அம்பானி என்றாலே பிரமாண்டம் தான் என்ற நிலையில் மனைவி நீடா அம்பானியின் நிகழ்ச்சி இருந்தது. ஆடிட்டோரியாமாக இல்லாமல் சொர்க்கலோகமா என கேட்கும் அளவுக்கு பிரம்மாண்டம் கரைபுரண்டு ஓடியது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் திரை பிரபலங்கள் கலாச்சார மையத்தின் பிரம்மாண்டத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் தங்கள் உடையில் பிரம்மாண்டத்தைக் காட்டியிருந்தனர். ஹாலிவுட் பிரபலமான பிரியங்கா சோப்ரா தன் கணவர் நிக் ஜோனஸ் உடன் ஜோடியாக கலந்து கொண்டார். பிரியங்கா சோப்ராவை போட்டோகிராபர்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். மேடையில் மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நடிகைகளின் உடையைத் தாங்கி செல்ல கூட ஆட்கள் வேலைக்கு வைக்கப்பட்டிருந்தனர். இறுதியாக, ஷாருக் கான் மேடையில் பதான் படத்தில் அல்டிமேட்டாக நடனமாடினார். சேலையில் சவுத் இந்தியாவின் குயினான ராஷ்மிகாவும் நாட்டு நாட்டு பாடலுக்கு போட்ட ஆட்டத்தை அங்கிருந்தோர் பார்த்து ரசித்தனர். இந்நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…