கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – மீண்டும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல் பணி துவக்கம்

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல் பணி துவக்கம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. கடந்த சில…

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மீண்டும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுதல் பணி துவக்கம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே 3ஆயிரம்,4 ஆயிரத்தை கடந்து பதிவாகிக்கொண்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்தியாவில் 3,823 பேருக்கு கொரோனா பாதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் நேற்று 4,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நேற்றைய பதிவினை விட 20 சதவீதம் அதிகமாகும்.

மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில் மூன்று இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே தமிழகத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற வழிமுறைகளை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியானது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டுதல் பணி தொடங்கியுள்ளனர். உஷார் மக்களே… உஷார்

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…