காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர்போர்வை தூவி மரியாதை . கண்ணிய தென்றல் காகித மில்லத் 128 ஆவது பிறந்த நாளை ஒட்டி சென்னை வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். காயிதே மில்லத் அரசியல் நிர்ணயம் அவை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் காயிதே மில்லத் அவர்கள்” நாட்டு விடுதலைக்காக தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர். தலைசிறந்த நாட்டு பற்றாளர்.
ஆட்சி மொழி பிரச்சனையால் தமிழை ஆட்சி மொழியாக வேண்டும் என ஆணித்தனமாக அரசியல் அவையில் வாதாடிய தமிழ் மொழி காவலர். சிறுபான்மை சமூகத்திற்காக உரிமைகுரல் எழுப்பியவர்”.என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் செய்தார். காயிதே மில்லத் நினைவிடத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் காயிதே மில்லத் மில்லத் முகமது இஸ்லாமிய பிறந்தநாளை முன்னிட்டு அவர் ‘இந்நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து போற்றுவோம்’ . என ட்விட்டரில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.