காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அறுபத்திமூவர் நாயன்மார்கள் திருவிழா

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமே சாட்சி. பஞ்சபூத தலங்களில்…

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. 63 நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள சேக்கிழார் இயற்றிய பெரியபுராணமே சாட்சி.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கக்கூடியது உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் . இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் திருக்கல்யாண விழா நடைபெறுவது மிகப் பிரசித்தம். கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது.ஏகாம்பரநாதர் காலை, இரவு என இரு வேளைகளில் பவழக்கல் சப்பரம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திரபிரபை, பூதவாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், வெள்ளி இடப வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, கைலாசபீட ராவண வாகனம் போன்ற வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.

நேற்று காலை 63 நாயன்மார்களின் திருவிழாவையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சுவாமியும், அம்பாளும் முன்னே செல்ல 63 நாயன்மார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மேளதாளங்கள் இசைக்க, வாத்தியங்கள் முழங்கிட நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிக் கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் இறைவனைத் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…