கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும்…

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம் கடந்த எட்டாம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகப்படுத்தி வைத்தார் .வாரம் முழுவதும் பயணிக்கும் இது நடமாடும் நூலகத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

ரூபாய் 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் நூலகம் சேப்பாக்கம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிக்கும் .வாரம் முழுவதும் தொகுதியின் ஏழு வார்டுகளுக்கும் பயணிக்கும் நடமாடும் நூலகத்தின் முக்கியம் நோக்கமே புத்தகங்கள் மூலம் உலகை அறிவோம் வாருங்கள் என்பதாகும் ‌. இன்றைய காலக்கட்டத்தில் படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது.நூலகத்தைத் தேடி படிப்பது கடினமான செயல். நூல்களே நம்மைத் தேடி வருவதால் தேவையான நூல்கள் நமக்கு கிடைக்கிறது.குழந்தைகளுக்குத் தேவையான புத்தகம், டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுக்குத் தேவையான புத்தகம் எனத் தனித்தனியாக புத்தக அறைகள் உள்ளன.படிக்கும் மாணவர்களுக்கு கலைஞர் நூலகம் மாணவர்களின் எதிர்காலக்கனவுகளை நனவாக்கும் நூலகமாக நிச்சயம் அமையும்.
நடமாடும் நூலகம் மொபைல் ஹெல்ப்லைன் எண்- 9176991768.

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் கூகுளுக்கு இணையாக அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில்,…

ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி வருகைக்குப் பின்னர் கூகுளுக்கு இணையாக அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நாளுக்கு நாள் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், பலர் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரில் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போனில் சாட்ஜிபிடி-ஐ பயன்படுத்தலாம்.

3 வழிகளில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்?

Microsoft Edge இலிருந்து ChatGPT ஐப் பயன்படுத்தவும்

1. உங்கள் ஸ்மார்ட்போனில் ChatGPT-ஐ இலவசமாகப் பயன்படுத்த, முதலில் Microsoft-ன் Microsoft Edge உலாவியைப் பதிவிறக்கவும்.
2. இதற்குப் பிறகு மைக்ரோசாஃப்ட் பிங்கை தேடுபொறியில் தேடுங்கள்.
3. இப்போது தேடல் பாக்ஸூக்கு அருகில் உள்ள Bing-ஐகானைக் கிளிக் செய்யவும்.
4. அதன் பிறகு வரும் புதிய பக்கத்தில் மின்னஞ்சல் ஐடி கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும்.
5. இப்போது நீங்கள் மின்னஞ்சலில் இருந்து OTP-ஐ Bing செயலியில் பதிவு செய்த பிறகு ChatGPT Chatbaot-ஐப் பயன்படுத்தலாம்.

Google Chrome-ல் ChatGPT-ஐப் பயன்படுத்தவும்

1. கூகுள் குரோம் பிரவுசரில் நீங்கள் ChatGPT-ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம்.
2. இதற்கு முதலில் கூகுள் குரோம் பிரவுசரை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யவும்.
3. இப்போது செயலியை திறக்கவும். இங்கே Google தேடலில் Chrome ChatGPT நீட்டிப்பை உள்ளிடவும்.
4. இதற்குப் பிறகு நீங்கள் ChatGPT Chrome எக்ஸ்டன்ஸனைக் காண்பீர்கள்.
5. அதனை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கவும். அதன் பிறகு, Open AI இணையதளத்தில் மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
6. இப்போது நீங்கள் Chrome உலாவியில் Google தேடலுடன் கூடுதலாக ChatGPT-ஐப் பார்ப்பீர்கள்.

உங்கள் தேடுபொறியில் ChatGPT-ஐப் பயன்படுத்தவும்

மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமின்றி யூ சர்ச் இன்ஜினிலும் நீங்கள் ChatGPT-ஐ இலவசமாகப் பயன்படுத்தலாம். உண்மையில் இது கூகுள் குரோம் பிரவுசர் போன்ற தேடுபொறி. ஆனால் ChatGPT போன்ற பல அம்சங்கள் இதில் காணப்படுகின்றன. நீங்கள் அதை இலவசமாக பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…