தமிழகத்தில் உறுப்பு தானம் செய்பவருக்கு அரசு மரியாதை இறுதி சடங்கு நடைபெறும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 2007, 2008 ஆண்டு உறுப்பு தானம் செய்யும் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டது.தற்போது தமிழ்நாட்டில் பலர் இந்த தானத்தை முன்வந்து செய்து பலரது வாழ்க்கையில் ஒளிமயமாக்கியுள்ளனர்.
விபத்துக்களால் மூளை சாவு அடைந்த மனிதர்களின் குடும்பத்தின் உறவினர்களின் ஒப்புதல் வழங்கிய நிலையில் உறுப்புகளை மற்றவர்கள் வாழ்வதற்காக தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் .உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றிருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.