ஆவின் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் இணையவழி விற்பனை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத் தொடர் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது.…

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் இணையவழி விற்பனை என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டத் தொடர் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் நலன் காக்க”கலைஞர் சங்கப் பணியாளர்கள் நலநிதி” உருவாக்கப்படும் என்றார். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்கவும், அதன் மூலம் ஆவின் பால் பெருக்கு திட்டம் செயல்படும் என்றார். ஆவின் பொருட்கள் ஆன்லைன் விற்பனை முதற்கட்டமாக சென்னை மற்றும் சில நகரங்களில் செயல்படுத்தப்படும். ஆவின் பொருட்கள் வீடுகளுக்குகே வந்து டெலிவரி செய்யப்படும். இதற்காக தனி செயலி, இணையதளம் உருவாக்கப்படும் என்றார்.

பால் பாக்கெட்கள் தயாரிக்க ரூபாய் 30 கோடியில் ஆவின் பண்ணைகளில் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் ஆவினில் பால் வாங்குபவர்களுக்கு இ-பால் அட்டை.(இமில்க் கார்டு)வழங்கப்படும். இதன்படி மாதந்திர பால் அட்டை இணையதளம் மூலம் வழங்கப்படும். பால் உற்பத்தியை மேம்படுத்த தமிழ்நாடு பால் உற்பத்தி மேலாண்மை கொள்கை உருவாக்கப்படும் ஆவின் சாக்லேட்டுகளின் தேவை அதிகமாக இருப்பதால், அம்பத்தூர் பால்பண்ணையில் சாக்லேட் தயாரிப்பு பிரிவு தொடங்கப்படும்” என்று கூறினார்.என இத்திட்டங்களை அறிவித்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…