ஆவடியில்110 அரங்குகளுடன் புத்தகத்திருவிழா!

110 அரங்குகளுடன்திருவள்ளூர் ஆவடியில் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் புத்தகம் வாசிக்க வேண்டும்…

110 அரங்குகளுடன்
திருவள்ளூர் ஆவடியில் மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

தமிழக முதல்வர் பொறுப்பேற்ற உடன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற உணர்வோடு வாசிப்பை நேசிப்போம் என்ற உன்னத நோக்கத்தோடு கடந்த கால கட்டங்களில் நடந்த வரலாறுகளை பொதுமக்கள், இளைஞர்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் புத்தகக் காட்சி நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன் பேரில், கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் 10நாள் புத்தகக் காட்சி நடைபெற்றது. இந்நிலையில், இந்தஆண்டுக்கான புத்தகக் காட்சி ஆவடி மாநகராட்சியில் உளள எச்விஎஃப் தொழிற்சாலை மைதானத்தில் மார்ச்17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்காட்சியில் 110-க்கும் மேற்பட்ட அரங்குகளில் சுமார் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தது‌ . புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது. காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் மாலை நேரத்தில் பட்டிமன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிறப்பு பேச்சாளர்களாக கோபிநாத், எஸ்.ராஜா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஈரோடு மகேஷ், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சுகி சிவம், மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர்.
முன்னதாக, இப்புத்தகக் கண்காட்சி குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புத்தகத் திருவிழா-2023 இலச்சினையை இலக்காகக் கொண்டது.ஆவடிபுத்தகப் பிரியர்களுக்கு இத்திருவிழா மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…