அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 700 பேருக்கு பொற்கிழியும் 70 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்கள்

இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 700 பேருக்கு பொற்கிழியும் 70 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தி.மு.க. அரசு மக்களோடு மக்களாய்…

இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 700 பேருக்கு பொற்கிழியும் 70 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

தி.மு.க. அரசு மக்களோடு மக்களாய் வாழும் அரசு. மதசார்பற்ற அரசு என்பதற்கு ஈரோடு தேர்தலே சிறந்த பதிலளிக்கிறது.மூத்த முன்னோடிகளான உங்கள் ஒவ்வொருவரையும் அறிஞர் அண்ணாவாகவும் தந்தை பெரியாராகவும் பார்கிறேன்.சால்வை, மலர்க்கொத்து இவற்றைத் தவிர்த்து இளைஞர் நற்பணி மன்றத்திற்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்யுங்கள் எனச் சிரிப்போடு சிந்தனையைத் தூண்டும் வகையில் இருந்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்புரை. நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் எம்.பி., எம்.கே. மோகன் , உள்பட கவுன்சிலர்கள் ,மாவட்ட, மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நுங்கம்பாக்கம் விளையாட்டுத்திடலில் கட்சியின் மூத்த முன்னோடிகள் 700 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கும் விழா 31.3.2023 அன்று மாலையில் நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாடு செய்து இருந்த இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 700 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழியும் 70 பேருக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…